பணத்துக்காக பாகிஸ்தான்.. ஐசிசி கோப்பைக்காக இந்தியா.. 2021 தெ.ஆ அணியை வைத்து ஹபீஸ் நிதர்சன பேட்டி

Mohammed Hafeez
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி நியூசிலாந்துடன் ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. மறுபுறம் தொடரை நடத்தும் பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியும் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதே சமயம் பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது.

அங்கே ஒரே மைதானத்தில் இந்தியா விளையாடுவதற்கு ஐசிசி ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது போக ஏற்கனவே ஐசிசியை கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியா தங்களின் 2023 ஆசிய கோப்பை போட்டிகளை இலங்கையில் விளையாடியதாகவும் விமர்சனங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஐசிசி என்ற பிசிசிஐ என்று பாகிஸ்தானியர்கள் இப்போதும் விமர்சிப்பது வழக்கமாகும்.

- Advertisement -

ஐசிசி சாதகம் இல்லை:

இந்நிலையில் இந்திய அணிக்கு ஐசிசி எந்த ஆதரவையும் வழங்குவதில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க போன்ற அணிகள் பணத்துக்காக விளையாடும் நிலையில் இந்தியா ஐசிசி கோப்பையை வெல்வதற்காக விளையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி 2021இல் தென் ஆப்பிரிக்க வாரியம் செய்த செயலை எடுத்துக்காட்டாக வைத்து அவர் பேசியது பின்வருமாறு. “2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு நான் சென்றேன். அப்போது அவர்கள் தங்களது முக்கிய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். தென்னாப்பிரிக்கா பொருளாதார அடிப்படை வலுவான வாரியம் கிடையாது. அவர்களுக்கு பணம் தேவை”

- Advertisement -

தரமான இந்தியா:

“எனவே பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் தங்களது சி அணியை விளையாட வைத்தனர். பின்னர் மீண்டும் தங்களது வீரர்களை ஐபிஎல் தொடரின் விளையாட அனுமதித்த அவர்கள் நியூசிலாந்துக்கு எதிராக தங்களின் சி அணியை டெஸ்ட் தொடரில் விளையாட வைத்தனர். பின்னர் எஸ்ஏ20 தொடரை தென்னாப்பிரிக்கா உருவாக்கியது. அந்த வகையில் பணத்தை உருவாக்கும் மெஷின் போல அவர்கள் தங்களது வாரியத்தை நடத்துகின்றார்கள்”

இதையும் படிங்க: அந்த 3 பேரும் கொஞ்ச டேஞ்சரா இருப்பாங்க.. பாத்து விளையாடுங்க.. இந்திய அணியை எச்சரித்த – அம்பத்தி ராயுடு

“நாமும் 2 முறை ஹைப்ரிட் மாடலில் ஆசிய, சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த ஒப்புக்கொண்டோம். அதனால் பணத்தை தவிர்த்து நாம் எதுவும் சம்பாதிக்கவில்லை. இங்கே வெற்றிக்காக விளையாடும் ஒரே அணி இந்தியா. அவர்கள் ஐசிசி கோப்பையை வெல்வதற்காக விளையாடுகிறார்கள். அவர்கள் ஐசிசியிடம் சாதகத்தை பெறுவதைப் பற்றி நாம் பேசுகிறோம். உண்மையில் அவர்கள் யாரிடமும் எந்த சாதகத்தையும் பெறுவதில்லை. தரமான கிரிக்கெட்டை விளையாடுவதன் வாயிலாகவே இந்தியா அனைத்தையும் சம்பாதித்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement