அதுக்கு அப்றம் எங்களுக்கு தன்னம்பிக்கை வந்துருச்சு.. இந்தியாவ தோற்கடிக்க நாங்களே போதும்.. ஆஸி வீரர் பேச்சு

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டு வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் எளிதாக வெல்ல விடமாட்டோம் என்பதை காட்டியது.

குறிப்பாக அந்த போட்டியில் ருதுராஜ் 123* ரன்கள் குவித்த உதவியுடன் 223 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 104* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்தார். அதனால் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

- Advertisement -

வீழ்த்த முடியும்:
இதை தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி டிசம்பர் 1ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. அதில் டிராவிஸ் ஹெட் தவிர்த்து கிளன் மேக்ஸ்வெல் உட்பட 2023 உலகக்கோப்பையில் விளையாடிய எஞ்சிய அனைத்து அனுபவமிக்க ஆஸ்திரேலிய வீரர்களும் பணிச்சுமை காரணமாக நாடு திரும்பியுள்ளனர். அதை பயன்படுத்தி 4வது போட்டியில் வென்று இத்தொடரை இந்தியா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 3வது போட்டியில் 223 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்தது தங்களுக்கு மிகப்பெரிய மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெரன்ஃடாப் தெரிவித்துள்ளார். எனவே முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும் தற்போதுள்ள வீரர்களை வைத்து இந்தியாவை தோற்கடித்து இத்தொடரின் கோப்பையும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எப்போதும் தன்னம்பிக்கை. இது போன்ற தொடரில் குறிப்பாக இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வது உங்களுக்கு எப்போதுமே தன்னம்பிக்கையை கொடுக்கும். அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் 222 ரன்களை சேசிங் செய்து கடினமாக போராடிய விதத்தில் கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையை நாங்கள் அடுத்து வரும் போட்டிகளில் எடுத்துச் செல்ல உள்ளோம்”

இதையும் படிங்க: 2 வீரர்களின் கேரியரை முடித்த பிசிசிஐ? தெ.ஆ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ

“இந்தியா அதிரடியாக விளையாடுவதை எதிர்கொள்வது கடினமாகும் ஆனால் அதில் சில வாய்ப்புகளும் இருக்கிறது. அதை பயன்படுத்தி நாங்கள் சிறந்த இடத்தில் ஃபீல்டர்களை வைத்து கேட்ச் பிடித்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த நல்ல போட்டியில் அசத்துவதற்கு எங்களிடமும் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். மேலும் முடிந்தளவுக்கு இந்திய அணியை நாங்கள் சுருட்டுவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement