கஷ்டப்பட்டு நாடு விட்டு நாடு வந்து ஒரே போட்டியில் கூட விளையாடமுடியாமல் மீண்டும் மூட்டையை கட்டிய சி.எஸ்.கே வீரர்

CSK-1

ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியான நிலையில் ஐபிஎல் தொடர் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் அதன் அடிப்படையில் இந்த கடினமான முடிவை பி.சி.சி.ஐ எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிலமை சரியான பின்னர் கூடிய விரைவில் ஐபிஎல் தொடர் நடக்கும் என்றும், ஒருவேளை நிலைமை சரியாக சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டால் ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்தி முடிக்க ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற அனைத்து வீரர்களும் அவர்களது ஊர்களுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர். வீரர்களை பத்திரமாக அவர்களது ஊர்களுக்கு வழியனுப்பி வைக்க பிசிசிஐ அதற்கு உண்டான வேலைகளை செய்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் இந்தியாவிற்கு வந்தார். சென்னை அணியில் விளையாட மிக ஆவலுடன் அங்கே விளையாடி கொண்டிருந்த உள்ளூர் தொடர்களை பாதியில் நிறுத்திவிட்டு இதற்காக வேகவேகமாக இந்தியா வந்தடைந்தார்.

தொடர ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் இந்தியா வந்தடைந்தார். இந்தியா வந்ததும் 14 நாட்களுக்கு தனிமையில் இருந்து முறையான பரிசோதனை எடுத்து தனது உடல் தகுதியை நிரூபித்தார். அதன் பின்னர் சென்னை அணி வீரர்களுடன் கலந்துகொண்டு கடினமான பயிற்சியை மேற்கொண்டார். எனினும் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்பொழுது ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது.

behrendorff

இதனால் உள்ளூர் தொடரை பாதியில் நிறுத்தி விட்டு அவசர அவசரமாக இந்தியா வந்து 14 நாட்களாக தனிமையில் இருந்து அதற்கு பின்னர் பயிற்சியும் எடுத்து, விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால் மிகுந்த விரக்தியில் மிகுந்த விரக்தியில் திரும்பச் செல்ல உள்ளார் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் உள்ளார்.

- Advertisement -

Behrendorff 1

மேலும் ஒரு சிக்கலாக தற்போது ஆஸ்திரேலியா செல்லும் விமானங்கள் மே 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் திரும்ப ஆஸ்திரேலியா செல்லும் அதிலும் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாட வந்து கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மாதம் அவருக்கு வீணாகி விட்டது தான் மிச்சம். எனினும் பிசிசிஐ அனைத்து வீரர்களையும் அவர்களது வீட்டுக்கு பத்திரமாக வழி அனுப்பி வைப்பதாக கூறியதை அடுத்து, அனைத்து வீரர்களும் தற்போது நிம்மதியாக இருக்கின்றனர்.