- Advertisement -
ஐ.பி.எல்

தோனிக்காக ரசிகர்கள் செய்ற மாதிரி உலகில் பாத்ததில்லை.. அவரிடம் இதை கத்துக்கிட்டேன்.. ஓவர்டன் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாராக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை வென்ற சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. அடுத்ததாக லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை மீண்டும் மும்பைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவதற்கு பெயர் போன சென்னை இந்த வருடம் இப்படி தடுமாறுவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அணி தங்களது அடுத்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

அந்த சத்தம்:

முன்னதாக சிஎஸ்கே அணி 5 கோப்பைகளை வெல்வதற்கு கேப்டன் எம்எஸ் தோனி முக்கிய பங்காற்றினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் சென்னை ரசிகர்கள் அவரை தல என்று தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அதே காரணத்தால் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் போதெல்லாம் மெரினா கடற்கரைக்கு கேட்கும் அளவுக்கு தோனி ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சேப்பாக்கத்தில் தோனி களமிறங்குவதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று தம்முடைய அப்பாவுக்கு மெசேஜ் செய்ததாக சிஎஸ்கே அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் சுழல் பந்துகளை எதிர்கொள்வதற்கான பேட்டிங் டெக்னிக்கை தோனியிடம் கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஓவர்டன் வியப்பு:

“சென்னையில் நடைபெற்ற முதல் போட்டிக்கு பின் என்னுடைய அப்பாவுக்கு மெசேஜ் செய்தேன். தோனி களத்திற்கு வருவதை நீங்கள் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். ஜடேஜா ரன் அவுட்டானதும் ரசிகர்கள் அதைக் கொண்டாடினார்கள். நான் நிறைய பிரீமியர் லீக் மற்றும் பல்வேறு விளையாட்டு தொடர்களைப் பார்த்துள்ளேன். ஆனால் தோனி களமிறங்கும் போது வரும் சத்தத்தைப் போல் கேட்டதில்லை”

இதையும் படிங்க: அர்ஜுன் அடுத்த கிறிஸ் கெய்லா வருவாரு.. அவர்கிட்ட கோச்சிங் அனுப்புங்க போதும்.. சச்சினுக்கு யோக்ராஜ் அட்வைஸ்

“தோனி பேட்டை தன்னுடைய கைகளால் மிகவும் தாழ்வாகப் பிடிக்கிறார். ஆனால் என்னை போன்ற ஆங்கில பேட்ஸ்மேன்கள் அல்லது ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மிகவும் உயர்வாகப் பிடிப்போம். இந்தியாவில் ஸ்பின்னர்கள் நிறைய பவுன்ஸ் பெறுவதில்லை. அதனால் தோனியை பார்த்து நானும் சற்று தாழ்வாக பேட்டை பிடிக்க முயற்சிக்கிறேன். எனது கைகள் சற்று நிதானத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு இந்த சூழ்நிலைகளில் பேட்டிங் செய்யும் போது நல்ல இடத்தில் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -