
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும் முனைப்புடன் தற்போது இங்கிலாந்து வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதே வேளையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி இந்த தொடரின் கடைசி போட்டியில் இவர் இணைந்தது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் இவரை இப்படி கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சேர்க்க காரணம் யாதெனில் : இங்கிலாந்து அணியானது தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ஒரே மாதிரி வீரர்களையே தேர்வு செய்தது விளையாடி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்துள்ளனர்.
இந்த தொடர் முழுவதுமே நிறைய ஓவர்களை வீசிய அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வளிக்கும் விதமாக ஜேமி ஓவர்டன் அடுத்த போட்டியில் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் இங்கிலாந்து அணியானது அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை.
இதையும் படிங்க : 5 ஆவது போட்டியிலாவது அவரை விளையாட வைங்க.. கவுதம் கம்பீருக்கு – சவுரவ் கங்குலி வேண்டுகோள்
எனவே அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் வகையில் ஜேமி ஓவர்டன் கடைசி போட்டிக்கான அணியில் இணைந்துள்ளார். இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜேமி ஓவர்டன் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.