இப்படி ஒரு சாதனையா..! 3வது டெஸ்ட்டில் இந்தியாவிற்கு எதிராக நிகழ்த்த போகும் இங்கிலாந்து வீரர்.!

- Advertisement -

வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 18) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரே நடைபெற இருக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார். அப்படி என சாதனை நிகழ்த்த போகிறார்? இதோ அவர் படைக்க போகும் சாதனை பற்றிய விவரம் கீழே உள்ளது.

james

- Advertisement -

அதாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 99 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். மேலும் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினால் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். இதற்கு முன் இந்திய அணிக்கு எதிராக ஒரு இங்கிலாந்து வீரர் கூட 100 விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது.

மேலும், இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச விக்கெட் எடுத்தவர் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 105 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த சாதனை எளிதாக தகர்க்க ஆண்டர்சன்க்கு வாய்ப்புள்ளது. இன்னும் இந்தியாவிற்கு எதிராக அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. எனவே இந்த தொடரில் அவர் இந்த சாதனையை புரிவார் என்று எதிர்பார்க்கலாம்.

james2

ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் 553 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில உள்ளார். முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையை தன வசம் வைத்துள்ளார். ஆண்டர்சன் வயது தற்போது 36 ஒருவேளை அவர் 40 வயது வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாள் அதிக விக்கெட்டுகளான 800 கூட முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement