சமீபத்தில் பால் டேம்பெரிங் என்னும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு அணியில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் தற்போதைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியுமான ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு அணியில் சேர மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நிர்வாகி கூறுகையில் “எல்லருக்கும் கேட்ட நேரம் என்பது வரும் அது வார்னேருக்கு தற்போது வந்து விட்டது.வார்னர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர். மேலும் அவர் தலைமை ஏற்று விளையாடிய அணைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் அவர் அணிக்காக செய்த நல்ல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் ,அதனால் அவருக்கு அணியில் சேர மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவ்ரில்லை ” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பால் டேம்பேரிங் எனப்படும் பந்தை சேதபடுத்திய செயலுக்கு பல கிரிக்கெட் ரசிகர்களும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் பந்தை சேதபடுத்திய விவகாரத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுரித்தி வந்தனர்.இதனால் நெருக்கடியில் சிக்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்த 3 வீரர்களுக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிக்கிய வார்னர் தான் கிரிக்கெட்டில் மிக பெரிய தவறு இழைத்து விட்டேன் என்று கண்ணீர் பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.