இந்திய அணியின் வீரரான இவரே உலகின் டி20 பவுலர். ஆஸி வீரர் – பேட்டின்சன் புகழாரம்

Pattinson

ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து ஜஸ்பிரித் பும்ரா வேகப்பந்து வீச்சாளரான இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி தனது முதல் ஓவரிலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அவர் அப்படிப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது வரை இந்திய வேகப்பந்து வீச்சு குழுவின் தலைமை வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

Bumrah

தற்போது ஐபிஎல் தொடரில் இவர் தயாராகி வருகிறார். இவர் விளையாடு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பை அணியில் இணைந்த பிறகு பேட்டின்சன் ஜஸ்பிரித் பும்ரா வை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

Bumrah

தற்போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி செய்து வருகிறேன். உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு இருக்கின்றனர். அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. சொல்லப்போனால் டி20 கிரிக்கெட் டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான்.

- Advertisement -

Bumrah

அதேபோல் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படக் கூடியவர். இந்த இருவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கிறது நான் ஏற்கனவேயே ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் விளையாடி இருக்கிறேன். இங்குள்ள ஆடுகளங்கள் பற்றி ஓரளவு அனுபவம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் பேட்டின்சன்.