ஐ.பி.எல் தொடரில் கொரோனா பரவ பி.சி.இ.ஐ எடுத்த இந்த தவறான முடிவே காரணம் – மும்பை பயிற்சியாளர் குற்றசாட்டு

Pamment
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே தடைபட்டது. மேலும் காலவரையின்றி இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்த பிசிசிஐ இந்த ஆண்டு முழுவதும் இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாது என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஐபிஎல் தொடரில் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட பிசிசிஐ எடுத்த தவறான முடிவை காரணம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மண்ட் ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

KKRvsRCB

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை துவங்கும் போது ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் பிசிசிஐ இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை அகமதாபாத் மைதானத்தில் நடத்தியது. அதுமட்டுமின்றி மேலும் அந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களை அனுமதித்ததில் தவறு செய்துள்ளது.

ஏனெனில் இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கிய வேளையில் 70,000 ரசிகர்களை ஒரே மைதானத்தில் அனுமதித்துள்ளது என்னை பொறுத்தவரை அந்த ஒரு முடிவு தவறானது. அதிலிருந்து கொரோனா பரவல் அகமதாபாத் நகரில் அதிகரிக்க துவங்கியிருக்கும். மேலும் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது கூட சென்னை மற்றும் மும்பையில் போட்டிகளில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

Pandya

ஆனால் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்ற போது வீரர்கள் அங்குதான் பாதிக்கப்பட்டனர். எனவே கொரோனா அதிகமாக பாதித்த நகரமாக அகமதாபாத் தற்போது மாறியுள்ளது. பி.சி.சி.ஐ பார்வையாளர்களை அனுமதித்த அந்த ஒரு தவறே கொரோனா பரவ காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தியாவில் ஐபிஎல் தொடருக்காக தான் வந்திருந்த போது சில நாட்கள் பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கவில்லை.

அப்போது பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறிய அவர் : அப்போது இந்தியா முழுவதும் அரசியல் பேரணிகள், திருமணம், மதம் சார்ந்த பண்டிகைகள், நிகழ்ச்சிகள் என அதிகளவு மக்கள் குவிந்தனர் என்றும் அதனால் மக்களிடையே அதிக தொடர்பு ஏற்பட்டதால் அனைவருக்கும் கொரோனா எளிதாக பரவி உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement