லார்ட்ஸ் டெஸ்ட் : என்னுடைய லாஸ்ட் மேட்ச் இது கிடையாது – இங்கிலாந்து வீரர் அதிரடி அறிவிப்பு

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களையும், இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை உள்ளது. மீதம் இரண்டு நாட்கள் போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி, தோல்வி முடிவுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்று வலுவாக இருந்தது.

red cap 2

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி அடுத்த 88 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்படி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக ஆண்டர்சன் திகழ்ந்தார். 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 31ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

39 வயதாகும் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் ? என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : லண்டன் லார்ட்ஸ் மைதானம் தான் என்னுடைய சொந்த மைதானம், இது எனக்கு கூடுதல் சிறப்பு. நான் எப்போது இங்கு பந்து வீசினாலும் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

anderson

அந்த வகையில் எனக்கு இது கடைசி போட்டி கிடையாது. லண்டன் மைதானம் நான் அறிமுகமான மைதானம். அதுமட்டுமின்றி முதன்முறையாக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் இங்கு தான் தற்போது இங்கு ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளேன். இந்த சாதனையை நினைத்தால் என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் எனக்கு இது கடைசி முறை கிடையாது. லார்ட்ஸ் மைதான பலகையில் என் பெயர் எழுதப்படுவதும் இது கடைசி முறை கிடையாது. நான் நிச்சயம் அடுத்து இங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவேன் என உறுதிபட ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

anderson 2

39 வயதாகும் அவர் மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவாரா ? என்று சந்தேகத்தில் இருக்கும் ரசிகர்கள் எப்பொழுது அவர் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடினாலும் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement