இப்போதைக்கு ரிட்டயர்டு ஆகுற மாதிரி ஐடியா இல்லை. அதுக்கு இன்னும் 2 வருஷம் ஆகும் – நட்சத்திர வீரர் அதிரடி

- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கிரிக்கெட் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஜூலை 8 ஆம் தேதி முதல் சர்வதேச தொடர்களில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடன் இங்கிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Anderson

- Advertisement -

மேலும் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த ஜனவரி மாதம் முதல் விலா எலும்பு பயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். தற்போது 37 வயதான இவர் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வு முடிவை அறிவித்து விடுவார் என்று பலரும் கணித்துள்ளனர்.

ஆனால் தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஆண்டர்சன் தனது உடல்நிலை குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி பேசிய அவர் கூறியதாவது : தற்போது காயத்திலிருந்து நான் முழுமையாக மீண்டு வந்து விட்டேன். ஆனால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் இந்த வேளையில் எனக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வை பயன்படுத்தி நான் என்னுடைய உடல் நிலையை மேம்படுத்தி வருகிறேன்.

Anderson-3

இப்போது இருக்கும் என் உடற்தகுதியை வைத்து என்னால் நிச்சயம் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நேரத்தில் என் உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு வருகிறேன். நிச்சயம் இங்கிலாந்து அணிக்காக திரும்புவேன் என்று கூறினார். நான் கிரிக்கெட் உலகிற்கு மீண்டும் திரும்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆக பார்க்கிறேன்.

- Advertisement -

வலைப்பயிற்சியில் பந்துவீசும் போது குறைவான நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இது என்னை இன்னும் நன்றாக உணர வைக்கிறது. களத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது ஒரு துரதிஷ்டமான நிகழ்வு என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் எப்படி இருந்தாலும் விளையாடியாக வேண்டும். மேலும் பார்வையாளர்கள் எழுப்பும் சப்தம் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் அது இல்லாமல் விளையாடுவது சற்று பின்னடைவு தான் என்று கூறியுள்ளார்.

anderson 2

இங்கிலாந்து அணிக்காக 2002 ஆம் ஆண்டு அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 194 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த இவரின் வருகை மற்றும் இரண்டு ஆண்டுகள் விளையாட போகிறேன் என்று கூறிய இந்த தகவலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement