NZ vs ENG : கிளன் மெக்ராத் – வார்னேவை மிஞ்சிய ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் ப்ராட், புதிய பிரம்மாண்ட இரட்டை உலக சாதனை

James Anderson Stuart Broad
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் உலகத்தில் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் மோதும் இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ஆம் தேதியன்று மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடி சரவெடியாக செயல்பட்டு 58.2 ஓவரில் 325/9 ரன்களை விளாசி முதல் நாளிலேயே டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.

அதிகபட்சமாக பென் டூக்கெட் 84 (68) ரன்களும் ஹரி ப்ரூக் 89 (81) ரன்களும் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நெய்ல் வேக்னர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 6 உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 83/5 என திண்டாடியது. இருப்பினும் டேவோன் கான்வே 77 ரன்களும் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட டாம் ப்ளெண்டல் சதமடித்து 138 ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றினர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெடுகளும் எடுத்தனர்.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:
அதை தொடர்ந்து 19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து ஓலி போப் 49, ஜோ ரூட் 57, ஹரி ப்ரூக் 54, பென் போக்ஸ் 51 என களமிறங்கிய பெரும்பாலான வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்ததால் 374 ரன்கள் குவித்து அசத்தியது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ப்ளாக் டிக்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 394 என்ற கடினமான இலக்கை துரத்தும் நியூசிலாந்து டாம் லாதம் 15, டேவோன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 0 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து 3வது நாள் முடிவில் 63/5 என்ற ஸ்கோருடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் இங்கிலாந்தின் சீனியர் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் ஸ்டோர்ட் பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர். 2வது இன்னிங்சில் ஸ்டுவர்ட் பிராட் இதுவரை 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மொத்தத்தில் இப்போட்டியில் இதுவரை இந்த ஜோடி 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளது. இதில் கடந்த 2003ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏற்கனவே அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதே போல் 2007இல் அறிமுகமான ஸ்டூல் பிராட் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2007 முதல் ஜோடியாக சேர்ந்து எதிரணியை தெறிக்க விட்டு வரும் இவர்கள் இதுவரை ஒன்றாக சேர்ந்து 1005 டெஸ்ட் விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்கள். அதில் ஆண்டர்சன் 525 விக்கெட்டுகளையும் ப்ராட் 480 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

1. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சு ஜோடி என்ற ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் – ஷேன் வார்னே சாதனையை தகர்த்துள்ள அவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ஜேம்ஸ் ஆண்டர்சன் – ரோட் ஸ்டூவர்ட் பிராட் : 1005* விக்கெட்கள்
2. கிளன் மெக்ராத் – ஷேன் வார்னே : 1001 விக்கெட்கள்
3. முத்தையா முரளிதரன் – சமீந்தா வாஸ் : 895 விக்கெட்கள்
4. கோர்ட்னி வால்ஷ் – கர்ட்லி அம்ப்ரூஸ் : 762 விக்கெட்கள்

இதையும் படிங்கவீடியோ : சிக்ஸர்களால் மிரட்டிய அக்சர் படேல், அபார பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய அஷ்வின் – ஆஸிக்கு இந்தியா பதிலடி

2. இதற்கு முன் சுழல் – வேகம் கூட்டணியான வார்னே – மெக்ராத் ஆகியோர் மட்டுமே ஒன்றாக இணைந்து 1000+ விக்கெட்கள் எடுத்திருந்தனர். தற்போது வேகப்பந்து வீச்சாளர்களாக 1000+ விக்கெட்களை எடுத்துள்ள இந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000+ விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சு ஜோடி என்ற மற்றுமொரு புதிய உலக சாதனையும் படைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Advertisement