உண்மையில் அந்த விடயம் ரொம்ப கஷ்டம் தான்.. ஆனாலும் இந்தியா கிட்ட டேலன்ட் இருக்கு – ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து

James Anderson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்தது. அதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இந்திய அணி தவறவிட்டது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி என அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய டெஸ்ட் அணி விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்திய அணியிடம் நிறைய டேலன்ட் இருக்கு : ஜேம்ஸ் ஆண்டர்சன்

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சீனியர் வீரர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டனர்.

- Advertisement -

என்னதான் டெஸ்ட் அணியின் மீது சில விமர்சனங்கள் இருந்து வந்தாலும் அனுபவ வீரரான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறியது தற்போது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது? என்பது குறித்த கேள்வியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ஜாம்பவான்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்து வெளியேறியுள்ளது குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரோகித் சர்மாவும் சிறந்த கேப்டன் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளது மிகப்பெரிய இழப்புதான். இருபினும் அவர்களது இடத்தை நிரப்பும் அளவிற்கு இந்திய அணியிடம் நிறைய டேலன்ட்டான வீரர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : இந்த வருஷம் ஐ.பி.எல் கப்பு ஆர்.சி.பி டீமுக்கு தான்.. அதுக்கு காரணம் இருக்கு – முகமது கைப் பேட்டி

குறிப்பாக ஐபிஎல் தொடரை பார்க்கும் போதே அவர்கள் எத்தனை திறமையான வீரர்களை வைத்துள்ளார்கள் என்பது தெரியவரும். எனவே அவர்கள் இருவரும் இல்லை என்றாலும் இந்திய அணி பலமான அணிதான் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement