மழையின் காரணமாக மிகப்பெரும் சாதனையை மயிரியிழையில் தவறவிட்டு நிற்கும் ஆண்டர்சன் – விவரம் இதோ

- Advertisement -

கடந்த மார்ச் மாத துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் நடைபெற இருந்த பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருந்தன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர். அதன் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியினால் முதல் தொடராக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அடுத்தடுத்து தொடர்களில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது.

wivseng 1

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற தற்போது 1-0 என்ற முன்னிலையுடன் தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று போட்டி மழையினால் நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 699 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வீரராக திகழ்கிறார். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

anderson 2

இந்நிலையில் அவரது சாதனையை மழை சற்று நேரம் தள்ளிவைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து ஷேன் வார்னே 708 விக்கெட்டுகள், கும்ப்ளே 619 விக்கெட்டுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருக்கும் 38 வயதான ஆண்டர்சன் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி மகத்தான சாதனை படைக்க அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

anderson

இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்ன் இனி வரும் போட்டிகளில் ஆண்டர்சன் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பவுலராகவும், வெளி நாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு பௌலிங் கோச்சாகவும் செயல்படலாம் அவ்வளவு அனுபவம் அவரிடம் நிறைந்திருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement