டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சரித்திர சாதனை புரிந்த ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் இவர்தானாம்

Anderson

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியனில் துவங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சிறிது இடைவெளிக்கு பிறகு அணியில் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

anderson 1

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த போட்டி அவருக்கு 150 ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் ஆஷஸ் தொடரின் போது காயத்தால் வெளியேறினார்.

அதன் பிறகு தற்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ள ஆண்டர்சன் இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் 150 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

anderson 2

இதுவரை 249 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர்கள் பட்டியலில் மெக்ராத் 124 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வால்ஷ் 132 போட்டிகளிலும், ஸ்டூவர்ட் பிராட் 135 போட்டிகளிலும் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ் 131 போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -