சச்சினை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை புரிந்த இங்கிலாந்து புயல் – இப்படி ஒரு சாதனையா ?

Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அந்த சாதனை யாதெனில் இதுவரை சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்திருந்தார். மொத்தமாக 94 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்திய மண்ணில் விளையாடி சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

Anderson

இன்று அதனை முறியடித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து மண்ணில் அவரது 95 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இதன்மூலம் சச்சினின் சாதனையை முறியடித்து இவர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இனிவரும் காலத்தில் நிச்சயம் இந்த சாதனை எவராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையாக வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Anderson

ஏனெனில் டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள் உள்ள மோகம் காரணமாக டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இவரது சாதனை வீழ்த்த படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள வீரர்கள் பட்டியல் :

சச்சின் – 94,

ஆண்டர்சன் – 95,

ரிக்கி பாண்டிங் – 92,

Advertisement