- Advertisement -
உலக கிரிக்கெட்

மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதியும், அதனை தொடர்ந்து கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.

சாதனைக்காக காத்திருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்துள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நியூசிலாந்து ஜாம்பவான் பிரெண்டன் மெக்குல்லம் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்க இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஜெய்ஸ்வால் படைக்கப்போகும் சாதனை யாதெனில் :

இந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜெய்ஸ்வால் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த சேவாக்கை ஏற்கனவே ஜெய்ஸ்வால் பின்னுக்கு தள்ளி இருந்தார்.

- Advertisement -

வீரேந்திர சேவாக் கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 22 சிக்ஸர்களை விளாசியிருந்தார். அவரது இந்த சாதனையை ஜெய்ஸ்வால் ஏற்கனவே முறியடித்த வேளையில் எதிர்வரும் இந்த வங்கதேச தொடரின் இரண்டு போட்டிகளில் மேலும் ஒரு சிக்சரை அடித்தால் பென் ஸ்டோக்ஸ்ஸையும் மிஞ்சுவார். அதனை தொடர்ந்து இன்னும் 8 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பிரண்டன் மெக்குல்லத்தின் சாதனையையும் அவர் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிஎஸ்கே அணிக்கு ஆர்சிபி ஒர்த்தான பரம எதிரி கிடையாது.. அதுக்கு இதை செய்யனும்.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

மெக்குல்லம் கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்ஸர்களை விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மேலும் 8 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் அடிக்கும் பட்சத்தில் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -