தோனியை கண்டதும் கை எடுத்து கும்பிட்ட ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் – வைரலாகும் புகைப்படம்

Dhoni-2
- Advertisement -

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாமல் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக இளம் வீரர் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் களமிறங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் அற்புதமாக ஆடியதன் மூலம் கவனம் பெற்றவர் இவர். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி இவரை 2.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது

இவர் உண்மையில் தோனியின் தீவிர ரசிகர். ஆடுகளத்தில் வீரர்கள் அனைவரும் ஆடுகளத்தின் தன்மையை பற்றி புரிந்துகொள்ள உள்ளே சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது தோனியும் ஆடுகளத்திற்கு இருந்தார். தோனியை பார்க்க களத்திற்குள் 19 வயது இளம்வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் வந்தார்.

Jaiswal

தோனியின் தீவிர ரசிகரான தோனியை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ கடவுளை நேரில் பார்த்தது போல் கையை வைத்து உடனடியாக வணங்க தொடங்கிவிட்டார்.
இதனை பார்த்த தோனி ஒரு அழகான சிரிப்பு சிரித்து விட்டு அவரை கடந்து சென்றார் ஆனால் யாஸ்வி ஜெய்ஸ்வாலால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

Jaiswal 1

ஏற்கனவே தான் இதுவரை தோனியை நேரில் சந்தித்ததில்லை அவ்வாறு நேரில் பார்ப்பதற்காக ஆவலாக காத்திருப்பதாக ஜெய்ஷ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement