- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி அசத்தலான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்துடன் இந்த போட்டி நிறைவுக்கு வரும் என்றும் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்திய ஜெய்ஸ்வால் :

அதன்படி நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்ட பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 189 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 30 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தற்போது தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவர் அடித்த இந்த 12 ரன்கள் மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மிக முக்கியமான சாதனை ஒன்றை முறியடித்து மைல்கல் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்ஸ் அவரது டெஸ்ட் கரியரில் 50-வது இன்னிங்ஸ் ஆகும். இந்த இன்னிங்ஸில் 12 ரன்கள் அடித்த அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் 50 இன்னிங்ஸ்களில் விளையாடி 2440 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் 50 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2415 ரன்கள் மட்டுமே அடித்திருந்த வேளையில் அவரை பின்னுக்கு தள்ளி தற்போது 2440 ரன்களை ஜெய்ஸ்வால் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பாக முதல் 50 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கௌதம் கம்பீர் 2692 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : 11 பேரை விடுவித்த கையோடு அடுத்த 2026 ஆம் ஆண்டிற்கான கேப்டனையும் அறிவித்த சி.எஸ்.கே – விவரம் இதோ

அவருக்கு அடுத்து ராகுல் டிராவிட் முதல் 50 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2,540 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை நிரந்தர துவக்க வீரராக விளையாடிய வரும் ஜெய்ஸ்வால் தனது கரியரின் ஆரம்பத்திலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இனிவரும் காலங்களில் இன்னும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -