- Advertisement -
இந்திய கிரிக்கெட்

58 ரன்கள் எடுத்து அவுட்.. சுனில் கவாஸ்கருக்கு அடுத்து 50 ஆண்டுகால சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

சுனில் கவாஸ்கருக்கு அடுத்து சாதனை நிகழ்த்திய ஜெய்ஸ்வால் :

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது போட்டியின் முதல் நாளான இன்று தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. போட்டியின் முதல் நாளான இன்று இரண்டாம் செஷன் வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் தற்போதைய நிலையில் இந்தியா வலுவாகவே உள்ளது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக இந்த முதல் இன்னிங்சில் இதுவரை அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், கே.எல் ராகுல் 46 ரன்களையும் குவித்து ஆட்டம் இழந்துள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் 107 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சுனில் கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார்.

அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை யாதெனில் : போட்டி நடைபெறும் இந்த ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு இந்திய அணியின் துவக்க வீரராக சுனில் கவாஸ்கர் அரைசதம் அடித்திருந்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து இந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் எந்தவொரு இந்திய துவக்க வீரரும் இந்த மைதானத்தில் அரைசதம் அடித்தது கிடையாது. அதனை தற்போது முறியடித்துள்ள ஜெய்ஸ்வால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் இந்திய துவக்க வீரராக அரைசதம் அடித்து கவாஸ்கரின் சாதனை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : 46 ரன்களில் ஆட்டமிழந்தாலும்.. காவஸ்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக கே.எல் ராகுல் – மாபெரும் சாதனை

அதிலும் குறிப்பாக சுனில் கவாஸ்கர் எப்படி 1974-ஆம் ஆண்டு 58 ரன்களில் ஆட்டம் இழந்தாரோ அதேபோன்று தற்போது யாஷஸ்வி ஜெயிஸ்வாலும் சரியாக 58 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -