இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 164 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 118 ரன்கள் குவித்து அசத்தினார்.
என் பெற்றோர் முன்னிலையில் சதம் அடித்தது மகிழ்ச்சி : ஜெய்ஸ்வால்
அவர் அடித்த இந்த சிறப்பான சதத்தின் மூலம் இந்திய அணி 396 ரன்கள் என்கிற வலுவான ரன் குவிப்பை வழங்கியது. இதன் காரணமாக 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை துரத்தி தற்போது இங்கிலாந்து அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது பெற்றோர்களுக்கு முன்னிலையில் சதம் அடித்தது மகிழ்ச்சி என்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு அவர் பேசியதாவது :
நான் சதம் அடித்ததும் எனது தாய் தந்தைக்காக தான் அந்த செலிப்ரேஷனில் ஈடுபட்டேன். என்னுடைய குடும்பம் இன்று முதல் முறையாக நான் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க வந்துள்ளார்கள். அவர்களுக்கு முன்னிலையில் நான் ஒரு டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததில் மிகவும் மகிழ்ச்சி.
அதிலும் அணிக்கு தேவையான நேரத்தில் நான் இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த தொடரில் இதுதான் கடைசி போட்டி என்பதனால் இந்த தொடரை சிறப்பாக முடிக்க முயற்சித்தேன். அந்த வகையில் என்னுடைய பெஸ்ட்டை வழங்க வேண்டும் என்றுதான் மனதில் வைத்துக்கொண்டு இந்த இன்னிங்க்ஸை விளையாடியதாக ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ரிலாக்ஸ் பண்ணாம இதை செய்ன்னு சொன்னேன்.. அடிவாங்கியாச்சும் இதை செய்ய நினச்சேன்.. ராகுல், ஆகாஷ் பேட்டி
ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் முதல் போட்டியில் சதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது கடைசி போட்டியிலும் சதம் அடித்து இந்த தொடரை மிகச் சிறப்பாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



