முத்தம் கொடுத்து இரட்டைசதத்தை கொண்டாடியது ஏன்? ஒருவழியாக முடித்துவிட்ட – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 396 ரன்களை குவித்தது. இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 290 பந்துகளை சந்தித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 209 ரன்கள் குவித்து அசத்தினார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இது என்பதனால் மைதானத்தில் இந்த இரட்டை சதத்தை ஜெய்ஸ்வால் கோலாகலமாக கொண்டாடினார். அதிலும் குறிப்பாக முதலில் பேட்டை உயர்த்திப் பிடித்த ஜெயஸ்வால் அதனை ரசிகர்களுக்கு சமர்ப்பித்தார்.

- Advertisement -

அதன் பின்னர் பேட்டையும், ஹெல்மெட்டையும் கீழே வைத்துவிட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த ரசிகர்களை நோக்கி இரண்டு கைகளையும் குவித்து முத்தம் கொடுத்தபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இப்படி முத்தம் கொடுத்து இந்த இரட்டை சதத்தை கொண்டாடியதற்கு பின்னால் அவருடைய காதலி இருக்கிறார் என்றும் அவரது காதலிக்காக தான் இது போன்ற ஒரு செலிப்ரேஷனில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டதாகவும் ஒரு வதந்தி சமூகவலைதளம் மூலம் பரவி வருகிறது.

- Advertisement -

அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த மேடி ஹேமில்டன் என்பவரை ஜெயிஸ்வால் காதலித்து வருவதாகவும் அவருக்காகவே ஜெய்ஸ்வால் இப்படி ஒரு செலிப்ரேஷனை செய்தார் என்றும் சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் எழுதி வந்தனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியை நேரில் காண மேடி ஹாமில்டன் நேரில் வந்திருப்பதால் இந்த வதந்திகளும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : 106 ரன்ஸ்.. இலங்கைக்கு டஃப் கொடுத்த மாமன் – மாப்பிளை ஜோடி.. ஆப்கானிஸ்தான் சாதிக்குமா?

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு பதிலளிக்கும் வகையில் பி.சி.சி.ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த கொண்டாட்டத்திற்கான காரணத்தை ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார். அந்தவகையில் ஜெய்ஸ்வால் கூறுகையில் : “என் அன்பிற்கு உரியவர்களுக்கு இந்த முத்தம்” என்று சூசகமான பதிலை அளித்து இந்த முத்தம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement