ரோஹித் மற்றும் ரஹானேவை தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து மோசமான சாதனையை நிகழ்த்திய – ஜெய்ஸ்வால் மற்றும் கில்

IND-Openers
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறிக்கிட்டது.

இதன் காரணமாக 15 ஓவர்களில் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களாக களமிறங்க யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மோசமான சாதனையை படைத்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் அவர்கள் படைத்த இந்த மோசமான சாதனை யாதெனில் : இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவருமே டக்அவுட் ஆனது இது இரண்டாவது முறை.

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களாக களமிறங்க ரோஹித் சர்மா மற்றும் ரகானே ஆகிய இருவரும் ரன் எதுவும் குவிக்காமல் டக் அவுட்டாகினர்.

இதையும் படிங்க : டக் அவுட்டாகி வெளியேறிய சுப்மன் கில்.. தலை மீது கை வைத்து அவமானப்படுத்திய பவுலர் – என்ன நடந்தது தெரியுமா?

அதனை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே ரன் எதுவும் குவிக்காமல் டக் அவுட்டாகி அந்த மோசமான சாதனையில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டியானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.

Advertisement