சாரி. என்னால் பயிற்சிக்கு சேப்பாக்கம் வரமுடியாது. பிராக்டீஸுக்கு நோ சொன்ன சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவில் தனது தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க முடியாது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை அங்கு ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.

ipl

இதற்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்னால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகே அவர்கள் அங்கு பயணிக்க உள்ளனர். வீரர்கள் சென்னை வரும் முன்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதில் தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பதற்கு முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருந்தது. இந்த பயிற்சியில் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, ஜடேஜா, ஹர்பஜன் சிங் போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது.

Jadeja

ஆனால் தற்போது இந்தப் பயிற்சியில் ஜடேஜா தனது சொந்த வேலை காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என்று சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காசிவிஸ்வநாதன் அறிவித்துள்ளார். மேலும் 21ம் தேதி தான் சென்னை அணியில் இணைந்து அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CSK

மேலும் இவர்களை தவிர்த்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், துணை பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் நேரடியாக துபாய் வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement