அவருக்கு காயமும் இல்ல. ஒன்னும் இல்ல. அவரு டீம்ல இருந்து விலக அவரு வைஃப் தான் காரணம் – ரசிகர்கள் குற்றச்சாட்டு

Rivaba Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அந்த தொடரின் பாதியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்ட ஜடேஜா தற்போது படிப்படியாக குணமாகி விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை முழங்காலில் செய்து கொண்ட அறுவைசிகிச்சை காரணமாக தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது.

Ravindra-Jadeja

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை அடுத்து இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்ததாக வங்கதேச தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது.

அப்படி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடருக்கான அணியில் ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்த வேளையில் அவர் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Rivaba 1

அதன்படி தன்னுடைய காயம் குணமடைய இன்னும் சில காலம் தேவை என அவர் பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டதால் பிசிசிஐ-யும் அவரை ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதேபோன்று டெஸ்ட் தொடரிலும் இருந்தும் அவர் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயமெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும் காயத்தை காரணம் காட்டி அவர் வேண்டுமென்றே வங்கதேச தொடரை புறக்கணித்துள்ளார் என்றும் இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : குஜராத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் தொகுதி வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதன் காரணமாகவே அவர் தனது மனைவிக்காக வாக்கு சேகரிக்கவே தற்போது இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக ரசிகர்கள் தங்களது குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பெரிய கோடிகளுக்கு விலை போகக்கூடிய 3 வெளிநாட்டு ஆல் ரவுண்டர்கள் – பட்டியல் இதோ

மேலும் அவர் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் தனது மனைவிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவர் வங்கதேச தொடரை புறக்கணித்து தனது மனைவிக்காக அரசியல் பணியாற்றுகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து ரவீந்திர ஜடேஜாவே விளக்கினால் மட்டும் தான் உண்மை தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement