சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் நான்தான். ட்வீட் போட்டு நீக்கிய வீரர் – வைரலாகும் புகைப்படங்கள்

jadeja
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13வது ஐபிஎல் தொடரின்போது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றுகளோடு சென்னை அணி வெளியேறியது. அதன் பின்னர் தற்போது மீண்டும் இந்த வருட 14வது ஐபிஎல் தொடரில் பலமாக திரும்ப வந்திருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்த சென்னை அணியானது இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியாக விளங்குகிறது.

CSK

- Advertisement -

ஒட்டுமொத்தமாக சென்னை அணி சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் தோனியின் பேட்டிங் பார்ம் மட்டும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 37 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தின் போது அவருக்கு 40 வயது ஆகிவிடும். இதன் காரணமாக அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்பது சந்தேகம்தான். ஆனாலும் சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார்.

இருப்பினும் தோனிக்கு அடுத்து சென்னை அணியை வழிநடத்த போகும் கேப்டன் யார் ? என்ற கேள்வி அதிக அளவில் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயித்தால் நிச்சயம் தோனி அணியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இதுவரை 200 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக தலைமை தாங்கியுள்ள தோனி 110 வெற்றிகளை பெற்றுள்ளார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணியானது மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் ? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பக்கத்தில் ஒரு கேள்வி வெளியானது. அதற்கு பதிலளித்த சிஎஸ்கே அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா : 8 என்ற நம்பரை மட்டும் பதிலாக குறிப்பிட்டு இருந்தார். சென்னை அணியில் எட்டாம் நம்பரை பயன்படுத்துவது ஜடேஜா மட்டும் தான். அவருடைய ஜெர்சி நம்பர் தான் 8 இதன் மூலம் அவர் தான் சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக விரும்புவதாக மறைமுகமாக சுட்டிக் காண்பித்து இருக்கிறார்.

அவரது இந்த ரிப்ளை இணையத்தில் வைரலாக சிறிது நேரத்தில் அதனை அவர் டெலிட்டும் செய்துவிட்டார். ஆனாலும் இதனை கவனித்த ரசிகர்கள் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் அந்த பதிவினை பகிர்ந்தும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் ? என்று அனைவரும் எதிர்பார்த்துக் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஜடேஜா தானாக முன்வந்து தனது பெயரை சொல்லியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement