இதேமாதிரி நாங்க விளையாடுனா எங்களை யாராலும் தோக்கடிக்க முடியாது – கொக்கரித்த ஜடேஜா

Jadeja

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் மற்றும் 81 பந்துகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி ரன் ரேட்டிலும் ஆப்கானிஸ்தான் அணியை முந்தி உள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார்.

rohith

அதன்படி சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியானது 17.4 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களுக்குள் சுருட்டியது. பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே 89 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் :

jadeja 1

இந்த மைதானத்தில் நான் பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் குறிப்பாக நான் எடுத்த முதல் விக்கெட் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் பந்து கொஞ்சம் டர்ன் ஆகி விக்கெட் விழுவது ஒரு பந்துவீச்சாளராக மகிழ்ச்சியை தரும். இது போன்ற நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாட விரும்புகிறோம். இன்றைய போட்டியில் பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : 6.3 ஓவர்களில் ஸ்காட்லாந்தை அணியை அடித்து நொறுக்க இதுவே காரணம் – வெற்றி குறித்து கோலி மகிழ்ச்சி

இன்னும் ஒரு போட்டி எங்களுக்கு உள்ளது. இதே போன்று நாங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் எங்களை யாராலும் வீழ்த்த முடியாது. டி 20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம் அந்த வகையில் இதே போன்ற ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக திகழ்வோம் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement