என் ஒட்டுமொத்த வாழ்க்கையை பொரட்டி போட்ட ஒரு மேட்ச்ன்னா அது இதுதான் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja 3

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக மூன்று வகையான அணியிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருபவர் ரவிந்திர ஜடேஜா. ஆனால் இவருக்கும் ஒரு சில காலகட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. அதன்படி 2018 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒன்றரை ஆண்டுகளாக அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா வின் சிறப்பான ஆட்டம் மற்றும் “குல்ச்சா” ஜோடியின் சிறப்பான பௌலிங் என அசத்தி வந்ததால் அணியிலிருந்த ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. அப்போது அவருடைய பேட்டிங் மற்றும் பவுலிங் என சற்று மந்தமாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது தான் கிரிக்கெட் கடினமாக நினைத்த காலம் பற்றியும் தனது வாழ்க்கையை திருப்பி அமைத்த ஒரு போட்டி குறித்தும் தற்போது ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி தான் என்னுடைய வாழ்க்கையே திருப்பிய ஒரு போட்டி. ஏனெனில் அந்த போட்டியில் இங்கிலாந்து சூழ்நிலையை சமாளித்து உலகின் மிகச்சிறந்த பௌலிங் அட்டாக்கிற்கு எதிராக நான் ரன்களை அடித்ததும் என்னால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் ரன் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.

- Advertisement -

அதிலிருந்து என்னுடைய ஆட்டம் வேறு லெவலில் மாறியது. அதன் பின்னர் ஒருநாள் போட்டியில் ஹார்திக் பாண்டியா காயம் அடைய ஒருநாள் போட்டிகளிலும் மீண்டு வந்து என்னுடைய முழு திறமையை நான் வெளிப்படுத்தினேன். 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒன்றரை ஆண்டுகள் எனக்கு தூக்கமில்லாத இரவுகள் ஆகவே அமைந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலேயே 4-5 மணிக்கு எழுந்து நான் மீண்டும் அணியில் இடம் பிடிக்க என்ன பண்ண வேண்டும் ? என்ன செய்ய வேண்டும் ? நாம் மீண்டும் வலுவாக திரும்பி வர என்ன செய்ய வேண்டும் ? என்று யோசித்துக் கொண்டே இருப்பேன்.

jadeja 2

அதனால் எனக்கு தூக்கம் கூட வராது. அதன் பிறகு நான் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று என்னை நிரூபித்த பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. வெளிநாட்டு தொடர்களில் நான் அணியில் இருந்தாலும் விளையாடாத நாட்கள் என்னை மிகவும் வேதனை அடைய வைத்தன. அதன் பின்னர் நான் மெல்ல மெல்ல என்னுடைய திறனை வெளிக்கொணர்ந்து என்னுடைய திறமையை நிரூபித்து தற்போது பலமாக திரும்பி உள்ளேன் என்று ரவீந்திர ஜடேஜா கூறினார். தற்போதைய உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டு என்பது மட்டுமின்றி மிகச் சிறந்த பீல்டராகவும் ஜடேஜா திகழ்கிறார்.

- Advertisement -

Jadeja-2

இதுவரை இந்திய அணிக்காக அவர் 51 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா குறிப்பிட்ட அந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்டில் இந்திய அணி 160 விக்கெட்டுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா 156 பந்துகளில் 86 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement