ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனியே காரணம் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தங்களது பெருமையை காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

indvsaus

- Advertisement -

துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 150 ரன் கணக்கில் இந்திய அணி 5 விக்கெட் இழந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடி அணியை 302 ரன்கள் எடுக்க வைத்தனர்.

இதில் ஹர்திக் பாண்டியா 92 ரன்கள் மற்றும் ரவிந்திர ஜடேஜா 66 ரன்களும் குவித்தனர். குறிப்பாக ரவிந்திர ஜடேஜாவின் பேட்டிங் சமீப காலமாக சிறப்பாக இருப்பதை நாம் காண முடிகிறது. ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தற்போது இந்திய அணிக்காகவும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது பேட்டிங் மேம்பட்டதற்கு தோனி தான் காரணம் என்று பேசியிருக்கிறார் ஜடேஜா.

jadeja

அவர் கூறுகையில் ” எப்போதும் போட்டிக்கு முன்னர் கடுமையாக பயிற்சி செய்வதே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். பிடிக்க முடியாத கேட்ச் வந்தாலும் கூட பிடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருப்பேன். இதற்காக கூடுதல் பயிற்சிகளை செய்வேன். தோனி இதுபோன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். சென்னை மற்றும் இந்திய அணியில் ஆடும் போது நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

Jadeja

முக்கியமாக ஆடும்போது இறுதி நேரம் வரை களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளார் தோனி. கடைசி ஓவர் வரை நின்றால் கூடுதல் ரன்கள் எடுக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தது அவர்தான். இடையில் ஒரு சில ஓவர்களில் பவுண்டரிகள் அடித்தால் கூட நாம் நினைத்ததை செய்ய முடியும் என்றும் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதனை வைத்து தான் நேற்றைய போட்டியில் இறுதிவரை நின்று மிகச்சிறப்பாக ஆடினேன்” என்று தெரிவித்திருக்கிறார் ரவிந்திர ஜடேஜா.

Advertisement