CSK vs DC : பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தோனியால் கணிக்க முடிகிறது – ஜடேஜா பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

JADEJA
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Dhoni

போட்டி முடிந்து பேசிய ஜடேஜா கூறியதாவது : இந்த போட்டியில் நான் மகிழ்ச்சியாக பந்துவீசினேன். மேலும், பந்து நன்றாக திரும்பியது. பந்துவீசும் சரியான திசையை மட்டும் பார்த்து பந்துவீசினேன் அதனால் விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த தொடர் முழுவதும் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

Tahir

மேலும், எனது பந்துவீச்சில் போது ஸ்டம்பிற்கு பின் நின்று தோனி எனக்கு கொடுக்கும் அறிவுரையின் படியே நான் பந்துவீசுகிறேன். பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்று தோனிக்கு தெளிவாக தெரிகிறது. அதனால் அவர்கூறும் பகுதியில் பந்தினை பிட்ச் செய்தால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று ஜடேஜா கூறினார.

Advertisement