CSK vs KKR : ரசலுக்கு எதிராக ஒரு ரன்னை கூட விட்டுத்தர என்மனம் மறுக்கிறது – சி.எஸ்.கே வீரர் அதிரடி

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி ஒரு பக்கம் சரிவினை சந்தித்து அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போதும் ரசலின் ஆட்டம் மட்டும் திருப்தி அளித்தது. அவர் ஒரு பந்தினை தூக்கி அடிக்கையில் அது பவுண்டரி எல்லைக்கு பறந்தது. ஆனால், அங்கு இருந்த ஜடேஜா அந்த பந்தை தாவி

Russell
- Advertisement -

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி ஒரு பக்கம் சரிவினை சந்தித்து அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போதும் ரசலின் ஆட்டம் மட்டும் திருப்தி அளித்தது. அவர் ஒரு பந்தினை தூக்கி அடிக்கையில் அது பவுண்டரி எல்லைக்கு பறந்தது. ஆனால், அங்கு இருந்த ஜடேஜா அந்த பந்தை தாவி பிடித்து பந்து சிக்ஸ் போகாமல் தடுத்தார். மேலும் போட்டி முடிந்து ஜடேஜா பேசுகையில் ரசலின் அந்த சிக்சை நான் தடுத்ததுக்கு காரணம் அவரை ஒரு சிக்ஸ் அடிக்க விட்டால் அடித்து கொண்டே இருப்பார். அதனாலே அந்த சிக்ஸரை தடுத்தேன் என்று கூறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

Gill

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement