- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு இவரால் தான் ஆபத்து ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதை – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்திய அணியின் நட்சத்திர சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 13 ஆண்டு கால அனுபவம் உடைய ஜடேஜா தனது சிறப்பான சுழற்பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங் காரணமாக மூன்று வகையான இந்திய அணியிலும் முக்கிய இடம் பிடித்து இதுவரை விளையாடி வருகிறார்.

முன்பு எப்போதை காட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரது இடத்தின் மீது தற்போது விமர்சனமும் எழுந்துள்ளது. ஏனெனில் மிகச் சிறப்பாக பவுலிங் செய்வது மட்டுமின்றி அதிரடியாக பேட்டிங் செய்வதனால் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஜடேஜா இடம் பிடித்து வந்தார்.

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக பதவி ஏற்றதிலிருந்து அவருடைய பேட்டிங்கும் சரி, பவுலிங் சரி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். அதோடு ஐபிஎல் தொடருக்கு பின்னர் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டபோது அணிக்குள் என்ட்ரி கொடுத்த பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அச்சர் பட்டேல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவர் ஜடேஜாவைப் போன்றே பந்துவீச்சில் அசத்துவதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டுகிறார். அதுமட்டுமின்றி 28 வயதே நிரம்பிய இளம் வீரரான அவர் இனிவரும் காலங்களில் ஜடேஜாவின் இடத்திற்கு கடும் சவாலை அளிப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் ஜடேஜா தற்போது 33 வயதை எட்டிய நிலையில் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் சரியான வயதில் இருக்கும் அக்சர் பட்டேல் தற்போது அவரது ஆட்டத்தில் மென்மேலும் ஜொலித்து வருவதால் நிச்சயம் இனி ஒருசில போட்டிகளில் ஜடேஜா சொதப்பினால் கூட அவரது இடத்திற்கு வேறு எந்த வீரரும் இன்றி முதல் நபராக அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியில் ரோஹித், கோலி, பும்ராவை விட அவருக்கு மட்டும் மாற்று வீரரே கிடையாது – ஆகாஷ் சோப்ரா பாராட்டும் நட்சத்திர வீரர்

சமீப காலமாகவே தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அக்சர் பட்டேல் அசத்தி வருவதால் நிச்சயம் ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேலால் தான் ஆபத்து என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by