இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவிருக்கும் சாதனை :
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இன்று அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாளில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 27 அரைசதம் என 3990 ரன்களை குவித்துள்ளார்.
இந்த போட்டியில் மேலும் அவர் 10 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 4000 ரன்களை பூர்த்தி செய்து சாதனை நிகழ்த்துவார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் அபாரமான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 982 ரன்ஸ்.. ஆஸி ஜாம்பவான் பெலின்டாவின் 28 வருட சாதனையை தகர்த்த மந்தனா.. புதிய உலக சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் அடித்து அசத்திய ஜடேஜா நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியில் 10 ரன்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்துவார் என்பது உறுதி.



