2019 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜடேஜா கண்ட சரிவு – இருந்தாலும் இந்த போட்டியில இப்படி பண்ணியிருக்க கூடாது

Jadeja
Advertisement

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த பல மாதங்களாகவே காயத்தினால் பல்வேறு முக்கிய தொடர்களை தவற விட்டார். ஆனால் அண்மையில் காயத்திலிருந்து மீண்ட அவர் சென்னையில் நடந்த ரஞ்சி போட்டியில் விளையாடி மீண்டும் தனது உடற்தகுதியை நிரூபித்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் மீண்டும் இடம் பிடித்தார்.

Jadeja

இப்படி இடம் பிடித்தது மட்டுமின்றி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலுமே அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். அதோடு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்ட ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக தனது பெயரை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இப்படி இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தாலும் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 9 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் 36 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

jadeja 2

இப்படி ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே அவர் 10 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழப்பது கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே இரண்டாவது முறை கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்களிலும் 10 ரன்னுக்கு குறைவாக அடித்த ஜடேஜா அதன் பிறகு பேட்டிங்கில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

இப்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இப்படி ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தது அவரது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய போட்டியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : தோல்வி உறுதி – அவருக்கு பார்ட்னரே கிடைக்கல, ரோஹித் கேப்டன்ஷிப் தவறை சுட்டிக்காட்டிய வாசிம் ஜாபர்

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்ற வேண்டும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த போட்டியிலா ஜடேஜாவின் பேட்டிங் இப்படி ஆகனும் என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement