MS Dhoni : தோனி காலில் தவறுதலாக விழுந்த ஜடேஜா. பேட்டால் அடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும்

Dhoni-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கடைசி ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். சிக்ஸ் அடித்த ஜடேஜா நிலைதடுமாறி கீழே விழ அவரை தூக்குவதற்காக ஜடேஜாவை நோக்கி நடந்து சென்றார் தோனி. அப்போது தோனியின் கால் பக்கத்தில் ஜடேஜா இருக்க தோனி சிரித்துக்கொண்டே அவரை பேட்டால் அடித்தார்.

Advertisement