இன்னும் எத்தனை மேட்ச் தோத்தாலும் அவரை டீமை விட்டு தூக்க மாட்டோம் – ஜடேஜா அளித்த வாக்குறுதி

Jadeja-2
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 15-வது ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்து இருந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் மூன்றாவது போட்டியில் மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுத்து வெற்றியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CSK vs PBKS 3

- Advertisement -

ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 180 ரன்களை விளாச நிச்சயம் இந்த ரன்களை சென்னை அணி எளிதாக செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் சென்னை அணியில் உள்ள பேட்டிங் வரிசை மிகவும் நீண்டது என்பதனால் நிச்சயம் இந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு முதல் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 18 ஓவர்களிலேயே 126 ரன்களில் சுருண்டது. இந்த தோல்வி சென்னை அணிக்கு 3 ஆவது தோல்வி என்பதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

Ruturaj
Ruturaj Gaikwad

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சி.எஸ்.கே அணியில் தக்கவைக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் அவர் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால் அவர் மீது ஒரு கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கெய்க்வாட் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உண்டான தன்னம்பிக்கையை நாங்கள் வழங்குவோம். மேலும் சென்னை அணிக்காக அவர் தொடர்ந்து விளையாட நான் அவரை தன் அணியில் தக்க வைப்பேன்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் ஸ்டைலில் அடிவாங்கும் ருதுராஜ் கெய்க்வாட், கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

ஏனெனில் நம் அனைவருக்குமே தெரியும் அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர். நிச்சயம் அவருடைய பார்மை மீட்டெடுத்து அவர் பலமான வீரராக மாறுவார். சென்னை அணிக்கு அவர் நிச்சயம் அவசியமான ஒரு வீரர் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement