இங்கி அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறாத 2 முக்கிய வீரர்கள் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.அதன் பின்னர் தற்பொழுது டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி இந்த டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

ind

கேப்டன் விராட் கோலி , வைஸ் கேப்டன் ரோகித் சர்மா , ஷிகர் தவன் , சுப்மன் கில் , சூர்யகுமார் யாதவ் , ஸ்ரேயாஸ் ஐயர் , ஹர்திக் பாண்டியா , ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , சாஹால் , குல்தீப் யாதவ் , குருனல் பாண்டியா , வாஷிங்டன் சுந்தர் , புவனேஸ்வர் குமார் , முகமது சிராஜ் , ஷர்துல் தாகூர் , பிரசித் கிருஷ்ணா, நடராஜன்.

இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நடராஜன், மற்றும் புதிதாக களமிறங்கவுள்ள பிரசித் கிருஷ்ணா எனவே இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பை இந்திய அணி கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ளது. டெஸ்ட் மட்டும் டி20 தொடர்களில் விளையாடிய ரோகித் சர்மா , விராட் கோலி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளிலும் நீடிக்கவுள்ளனர்.

மேலும் டி20 தொடரில் விளையாடிய புவனேஸ்வர் குமார், தாகூர், ராகுல், ஷிகர் தவான் அகியோர் ஒருநாள் போட்டி தொடரில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமிக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை இன்னும் முழுமையாக அவர்கள் சரியாக நிலையில் மற்றும் முழு உடல் தகுதியுடன் அவர்கள் இல்லாத நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Shami 2

ஐபிஎல் தொடருக்கு பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் களம் இறங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.