பவுண்டரி லைனில் சாகசத்தை காட்டிய ஜடேஜா-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement -

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் போது கொல்கத்தா வீரர் சுனில் நரைன் 4-வது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடினார். 9 பந்துகளை சந்தித்த அவர் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களை அடித்தார். அப்போது 11ஆவது அவரின் இறுதிப் பந்தினை தூக்கி அடிக்க நரேன் அந்த பங்கு சிக்சருக்கு அல்லது பவுண்டரிக்கு செல்லும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா அந்த பந்தினை விரைவாக ஓடி வந்து டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

பந்தினை பிடித்ததும் தரையில் வழக்கிச் சென்ற அவர் நாம் சறுக்கிக் கொண்டே சிக்ஸர் லைனுக்கு சென்று விடுவோமோ என்று யோசித்து பந்தினை தூக்கி அருகில் ஓடிவந்து டூபிளெஸ்ஸிஸ் இடம் வீசினார். அந்த பந்தை கச்சிதமாக பிடித்த டூபிளெஸ்ஸிஸ் விக்கெட் விழுந்த தருணத்தை கொண்டாடினார். இந்த வீடியோ பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருந்தது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement