- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க 2 பேரும் இதுக்கு தகுதியானவங்க.. ரோஹித் மற்றும் கோலி குறித்து பேசிய ஜாக் காலிஸ் – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறயிருந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

அவங்க 2 பேரும் இந்த வாய்ப்புக்கு தகுதியானவங்க : ஜாக் காலிஸ்

இப்படி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்றாலும் எதிர்வரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை தாங்கள் இந்திய அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடிவிட்டு அந்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றிய கையோடு அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவினை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் நிர்வாகமோ அவர்களின் வயதை காரணம் காட்டியும், இளம் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டியும் அவர்களை அடுத்த உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யுமா? செய்யாதா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. அதேவேளையில் ஒரு வடிவிலான போட்டியில் மட்டுமே விளையாடி வரும் அவர்கள் இருவருமே தொடர்ச்சியான சிறப்பான பேட்டிங் பார்மினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 2025-ல் மட்டும் விராட் கோலி 13 போட்டிகளில் விளையாடி 659 ரன்களையும், ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 650 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளனர். இப்படி இருவருமே மிகச்சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதியானவர்கள் என்றும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாக வேண்டும் என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஜாக் காலிஸ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு அவரது உடல் என்ன சொல்கிறது? என்பது மிகத் தெளிவாக தெரியும். அவரது உடம்பு எப்போது அவரது ஆட்டத்திற்கு ஒத்துழைக்க வில்லையோ அப்போது நிச்சயம் அவராக விலகிவிடுவார். அதனால் அவருடைய உடற்தகுதியை பற்றி எந்த ஒரு கவலையும் கிடையாது. அதேபோன்று ரோகித் சர்மாவும் மிகச் சிறப்பான ஒரு வீரர். அவராலும் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 300 ரன்ஸ்.. 27 வருடம் கழித்து அபார சாதனை படைத்த நியூஸிலாந்து ஜோடி.. இந்தியா சேசிங் செய்யுமா?

இருவருமே தற்போது விளையாடி வரும் விதம் அடுத்த 2027 உலக கோப்பையை குறி வைத்துதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கு இன்னும் இந்திய அணிக்காக கோப்பையை வெல்லும் வேட்கையும், வெறியும் இருக்கிறது. எனவே அவர்களை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும் என ஜாக் காலிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -