300 ரன்ஸ்.. 27 வருடம் கழித்து அபார சாதனை படைத்த நியூஸிலாந்து ஜோடி.. இந்தியா சேசிங் செய்யுமா?

IND vs NZ
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஹென்றி நிக்கோலஸ் – டேவோன் கான்வே ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமாக விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அந்த ஜோடி 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்துக்கு அபார துவக்கத்தைக் கொடுத்து பிரிந்தது. அதன் வாயிலாக 26 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக அதன் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நியூசிலாந்து ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தனர்.

- Advertisement -

சாதனை ஓப்பனிங்:

கடைசியாக 1999ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்துக்காக நாதன் அஸ்லே – க்ரைக் ஸ்பியர்மேன் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து ஓப்பனிங் ஜோடியில் நிக்கோலஸை 62 ரன்னில் அவுட்டாக்கிய ஹர்ஷித் ராணா மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வேயும் 56 ரன்னில் போல்டாக்கினார்.

அடுத்து வந்த வில் எங் 12 ரன்னில் முகமது சிராஜ் வேதத்தில் அவுட்டான போதிலும் டேரில் மிட்சேல் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் வந்த கிளன் பிலிப்ஸ் நிதானமாக விளையாட முயற்சித்து 12 ரன்னில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மிட்சேல் ஹே நேரடியாக விளையாட முயற்சித்து 18 (13) ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் போல்ட்டானார்.

- Advertisement -

நியூஸிலாந்து 300 ரன்கள்:

மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மிட்சேல் அரை சதத்தை அடித்து நியூசிலாந்தை வலுப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16, ஜக்காரி போல்க்ஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். இந்தப் பக்கம் சதத்தை நெருங்கிய மிட்சேல் 84 (71) ரன்கள் குவித்த போது பிரசித் கிருஷ்ணா வேதத்தில் அவுட்டானார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக நியூசிக்காக விளையாடும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் அசோக்.. அவருடைய பின்னணி இதோ

இறுதியில் கிர்ஸ்டன் கிளார்க் 24*, கைல் ஜெமிசன் 8* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் நியூசிலாந்து 300/8 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா 301 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி வருகின்றது.

Advertisement