- Advertisement -
உலக கிரிக்கெட்

வெ.இ அணியை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வெல்ல.. விராட் கோலி அட்வைஸ் தான் காரணம்.. ஜேக்கப் பேட்டி

இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மே 29ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டி எடுத்து 400/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பேத்தல் 82 (53), ஜோ ரூட் 57, பென் டக்கெட் 60, கேப்டன் ஹரி ப்ரூக் 58 ரன்களை விளாசி அசத்தினர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதத்தை அடிக்காமலேயே 400 ரன்கள் தொட்ட முதல் அணியாக இங்கிலாந்து உலக சாதனை படைத்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜேக்கப்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜெய்டேன் சீல்ஸ் 4, அல்சாரி ஜோசப் 2, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேசி கார்ட்டி 22, கேப்டன் ஷாய் ஹோப் 25, ஜெய்டேன் சீல்ஸ் 29* ரன்கள் அடித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்முத் 3, ஜேமி ஓவர்டன் 3, அடில் ரசித் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இந்த வெற்றிக்கு 82 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜேக்கப் பேத்தல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடிய போது விராட் கோலி கொடுத்த ஆலோசனைகள் தாம் சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்துவதற்கு உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் ஆலோசனைகள்:

இது பற்றி ஜேக்கப் பேசியது பின்வருமாறு. “சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது ஸ்பெஷல். எப்போதும் டாட் பந்துகள் பேட்ஸ்மேன்கள் மனதில் நல்ல உணர்வை கொடுக்காது. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் பயனைக் கொடுத்தது. 2 மாதங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாட செல்வதற்கு முன்பிருந்ததை விட தற்போது நான் முன்னேறிய பேட்ஸ்மேனாக இருக்கிறேன். விராட் சிறந்தவர். அவர் தன்னுடைய அனுபவங்களையும் பேட்டிங் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்”

இதையும் படிங்க: ஃபைனலுக்கு மும்பை வந்தா சோளி முடிஞ்சும்.. ஆர்சிபி அந்த டீம் வரனும்ன்னு வேண்டிக்கோங்க.. அஸ்வின் பேட்டி

“அவரிடம் கேட்பது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக இருந்தது ஸ்பெஷலானது. அங்கே அதிகம் சத்தம் இருந்தாலும் விளையாடுவது சிறப்பானது. என்னுடன் நிறைய ஆலோசனைகளை பகிர்ந்த விராட் கோலி சிறந்தவர். பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவரும் சிறந்தவர். விராட் கோலியுடன் பேட்டிங் செய்ய சென்ற போது கிடைத்த எனர்ஜியையும் தீவிரத்தையும் நான் என்னுடைய பேட்டிங்கில் எடுத்துக் கொண்டுள்ளேன்” எனக் கூறினார்.

- Advertisement -