21 வயதில் கேப்டன்.. 138 வருட சாதனையை உடைக்கப் போகும் இங்கிலாந்து வீரர்.. வெளியான அறிவிப்பு

Jacob Bethell
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. அத்தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. அதனால் சொந்த மண்ணில் கொஞ்சம் ஏமாற்றத்தைச் சந்தித்த இங்கிலாந்து அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அங்கு நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு எதிராக முழுமையாக 5 போட்டிகளில் விளையாடிய கேப்டன் ஹாரி ப்ரூக்கிற்கு இங்கிலாந்து வாரியம் ஓய்வு கொடுத்துள்ளது. அதனால் 21 வயதாகும் இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் அயர்லாந்தில் நடைபெறும் தொடரில் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

21 வயதில் கேப்டன்:

இடது கை பேட்ஸ்மேனான அவர் தேவைப்படும் நேரத்தில் பவுலிங் செய்யும் திறமையைக் கொண்டுள்ளார். இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 281 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே போல 2025 ஐபிஎல் தொடரில் அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடி கணிசமாக அசத்தினார். அத்தொடரில் விராட் கோலியுடன் விளையாடியது தன்னுடைய பேட்டிங்கை முன்னேற்ற உதவியதாக சமீபத்தில் பெத்தல் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக தற்போது அவர் 21 வயதில் 329 நாட்கள் வயதில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை தலைமை தாங்கும் இளம் கேப்டன் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார். இதற்கு முன் 1889ஆம் ஆண்டு மான்டி பார்க்கர் பௌடன் தன்னுடைய 23 வருடம் 144 வயதில் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனை.

- Advertisement -

138 வருட சாதனை:

தற்போது அந்த 138 வருட சாதனையை ஜேக்கப் பெத்தல் உடைத்து புதிய சாதனையைப் படைக்க தயாராக உள்ளார். அவருடைய தலைமையில் ஜோஸ் பட்லர், அடில் ரசித் போன்ற சீனியர் வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கும் அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி விபரங்கள்:

இதையும் படிங்க: 5 வருஷம் ஒரே மாதிரி சொதப்புனா எப்படி.. ஆதரவளித்த தாமே கோலியை விமர்சித்தது ஏன்? பதான் விளக்கம்

ஜேக்கப் பெத்தல் (கேப்டன்), ரீஹன் அஹ்மத், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், சகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன், மேத்தியூ போட்ஸ், அடில் ரசித், பில் சால்ட், லுக் வுட்

Advertisement