இந்திய வீரரான இவர் அடிச்ச அடில எனக்கு கிரிக்கெட் இதோடு போதும்னு நெனச்சிட்டேன் – இங்கி வீரர் ஜேக் லீச்

Leach

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அவர்கள் தொடரில் முன்னிலை அடைந்துள்ளனர்.

anderson

இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிங்கில் மோசமாக விளையாடி தோற்றாலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இயற்கையாகவே பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடும் பண்ட் பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் தன்மை உடையவர். இந்நிலையில் முதல் இன்னிங்சில் அவர் விளையாடிய விதத்தை பார்த்து தான் அதிர்ந்து விட்டதாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் இன்னிங்சின் போது இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் எனது பந்துவீச்சை தும்சம் செய்துவிட்டார். 8 ஓவர்கள் 77 ரன்கள் விட்டுக் கொடுத்த பிறகு நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேனா ? என்பது எனக்கே உறுதியாகவில்லை என்ற நிலையில் இருந்தேன் அந்த பேர் அதிர்ச்சிலிருந்து மீண்டு அணியின் வெற்றிக்கு பங்களிப்பு கொடுத்ததில் மிகப் பெருமை அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

pant 1

ஜேக் லீச் வீசிய ஒவ்வொரு ஓவரில் பண்ட் குறைந்தது ஒரு பவுண்டரிகளையாவது விளாசி ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் 8 ஓவர்களிலேயே 77 ரன்களை விட்டுக்கொடுத்து ஜாக் லீச் இரண்டாவது இன்னிங்சில் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா புஜாரா போன்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Eng-bess

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை 13ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் கேப்டன் கோலி இருப்பது குறிப்பிடத்தக்கது.