- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் போட்டியே அபிஷேக் சர்மாவுக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் தான்.. ஹைதெராபாத் கோச் பேட்டி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. முன்னதாக அந்த தொடரில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் டக் அவுட்டான அவர் 2வது போட்டியில் அதிரடியான சதமடித்து இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

குறிப்பாக 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு அவர் சதத்தை தொட்ட விதம் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அதே போல கணிசமான ஓவர்களையும் வீசிய அவர் 1 விக்கெட் எடுத்தார். மறுபுறம் நீண்ட நாட்கள் கழித்து இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்

- Advertisement -

வித்யாசமான போட்டி:
மேலும் பேட்டிங்கில் கணிசமான ரன்கள் எடுத்த அவர் தொடர்விருதை வென்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அதன் காரணமாக ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா இடத்தை பிடிப்பதற்கு அக்சர் பட்டேலுடன் அவரும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் ஷர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் ஒரே இடத்திற்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளர் ஜே ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேட்டிங்கில் அடித்து நொறுக்கும் அபிஷேக் ஷர்மா பவுலிங் வாஷிங்டன் சுந்தர் போல தொடர்ச்சியாக அசத்தும் திறமையை கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். மறுபுறம் பந்து வீச்சில் தொடர்ந்து அசத்தக்கூடிய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் அபிஷேக் போல் அதிரடியாக விளையாடும் திறமையை பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வாஷிங்டன் சுந்தர் ஒரு பவுலராக தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் தொடர்ச்சியாக அசத்தக்கூடியவர். அபிஷேக் ஷர்மாவிடம் ஒரு சில வேரியேசன்கள் மட்டுமே இருக்கிறது. சீம் பகுதியை பயன்படுத்தி வீசும் பந்துகளே அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் அளவுக்கு அவர் தொடர்ச்சியாக அசத்துபவர் கிடையாது”

இதையும் படிங்க: 108 ரன்ஸ்.. திருப்பூருக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத நடராஜன்.. அதிரடி வெற்றியால் திண்டுக்கல் ஏற்றம்

“ஆனால் அபிஷேக் ஷர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தரை விட டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடியவர். அவருடைய பேட்டிங் சூப்பராக இருக்கும். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் புதிய பந்தில் வீசும் பவுலர்களுக்கு எதிராகவும் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட கூடியவர். எனவே அந்த இருவருமே கிட்டத்தட்ட இந்திய அணியில் ஒரே இடத்திற்கு போட்டியிடக் கூடியவர்கள்” என்று கூறினார்.

- Advertisement -