Shreyas Iyer : தோனியின் இந்த செயல்பாடுகளே எங்களது அணியின் வெற்றியை பறித்தது – ஐயர் வருத்தம்

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Dhoni

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் துவக்கம் சரியாக அமைத்தாலும் அதன் பின்னர் வாரியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். மேலும், இந்த போட்டி உண்மையில் எங்களது அணியை பரிசோதித்து. நாங்கள் எந்த வகையில் பலவீனமாக உள்ளோம் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டியது. போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது தோனியின் செயல்பாடுகளே.

Dhoni

அவர் என்னை ஸ்டம்பிங் செய்தது என்னால் நம்பவேமுடியவில்லை. அந்த அளவிற்கு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார். ஐ.பி.எல் போட்டிகளில் நான் ஸ்டம்பிங் ஆவது இதுவே முதல் முறை. ரபாடா இல்லாதது எங்கள் அணிக்கு பெரும் இழப்பு ஏனெனில் டெத் ஓவர்களில் அவர் தொடர்ந்து சிறப்பாக வீசிவந்தார். இந்த போட்டியில் முதல் பேட்டிங் இறுதியில் தோனி ஆடிய விதம் போட்டியை எங்களிடம் இருந்து தலைகீழாக திருப்பியது என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement