Shreyas Iyer : யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. தோல்விக்கு இதுவே காரணம் – ஐயர் வருத்தம்

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

iyar
- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : நாங்கள் எதிர்பார்த்த அளவு ரன்களை குறிக்கவில்லை. பவர் பிளே ஓவர்களில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை அதற்கு காரணம் அவர்களிடமிருந்த ஸ்பின்னர்கள் அவர்கள் எங்களது அணி வீரர்கள் ரன் எடுக்க அழுத்தத்தை கொடுத்தனர். மேலும் எங்களது அணியில் பார்ட்னர்ஷிப் இந்த போட்டியில் சரிவர இல்லை.

Tahir 1

இந்த மைதானம் எங்களுக்கு பழக்கப்பட்ட மைதானம் இல்லை அதனால் நான் மைதானம் மீதும் குறை கூற விரும்பவில்லை. சென்னை அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடியது அதுவே எங்களது தோல்விக்கு காரணம். ஒரு கேப்டனாக நான் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன் தோனி, கோலி, ரோகித் ஆகியோருடன் ஒரு கேப்டனாக மைதானத்தில் டாஸ் போட்டது பெரிய பெருமை இந்த வருடம் எங்களுக்கு கனவு ஆண்டாக அமைந்தது. அடுத்த வருவோம் இதைவிட பலமாக திரும்பி வருவோம் என்று ஐயர் கூறினார்

Advertisement