டெல்லி அணிக்கு வந்த புது சிக்கல். புதிய கேப்டன் யார் தெரியுமா ? – விவரம் இதோ

gautam-gambhir-l-and-shreyas-iyer
- Advertisement -

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 13வது சீசனாக அடுத்த ஆண்டும் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான வீரர்கள் மாற்றம் மற்றும் வீரர்களின் ஏலம் தற்போது நடைபெறவுள்ளது.

dc

- Advertisement -

ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்கள் மற்றும் வாங்கப்போகும் வீரர்கள் என ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் டெல்லி அணிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து ரஹானேவும், பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வினையும் டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

தற்போது டெல்லி அணிக்கு புதிய சிக்கலாக அந்த அணியின் கேப்டனாக யார் நியமிக்கபடுவார்கள் என்ற ஒரு முக்கியமான சிக்கல் உருவாகியுள்ளது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு பாதி தொடர் வரை அந்த அணிக்கு கேப்டனாக கௌதம் கம்பீர் செயல்பட்டு வந்தார். ஆனால் கௌதம் கம்பீர் ஆல் நினைத்த அளவிற்கு வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.

எனவே தனது கேப்டன் பதவி தானாக முன்வந்து ஐயருக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டில் டெல்லி அணி கடைநிலையில் இருந்தாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியது. இளம் கேப்டனான ஐயர் தலைமையிலான டெல்லி அணி சென்ற தொடரில் சிறப்பாக செயல்பட்டது. எனவே இந்த தொடரிலும் அவரே கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Prithvi-Shaw

ஆனால் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஹானே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் ஆகியோர் ஐயரை காட்டிலும் சற்று அனுபவம் மிக்கவர்கள் என்பதால் யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் மீண்டும் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்று கோப்பையை வெல்ல முயற்சிப்பேன் என்று ஐயர் வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டார்.

Dc

எனவே டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட ஐயரே செயல்பட அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ப்ரித்வி ஷா மற்றும் தவான் என திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளதால் நிச்சயம் டெல்லி அணி அடுத்த தொடரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement