IND vs WI : கேப்டன்ஷிப் பொறுப்பு பரிசா அல்லது ஆபத்தா? ஷிகர் தவான் மீது பரிதாப்படும் முன்னாள் இந்திய வீரர்

Dhawan-1
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு பறந்துள்ள இந்தியா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதி போர்ட் ஆப் ஸ்பெய்ன் நகரில் துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் மற்றொரு நட்சத்திர மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் கேப்டனாக செயல்படும் ஷிகர் தவான் இந்த வருடம் இந்தியாவை 7-வது கேப்டனாக வழிநடத்த உள்ளார். கடந்த 2010இல் அறிமுகமாகி 2013இல் ரோகித் சர்மாவுடன் ஓபனிங் வீரராக களமிறங்கும் வாய்ப்பை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கொடுத்ததை பயன்படுத்திய இவர் ஸ்டைலிஷான இடதுகை பேட்ஸ்மேனாக சக்கை போடு போட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடித்தார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களைக் குவித்து அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டு கோல்டன் பேட் விருதை வென்றார்.

தண்ணீரில் எண்ணையாக:
அதன்பின் 2014, 2015, 2016, 2017, 2019 என வரிசையாக நடந்த அத்தனை உலக கோப்பைகளிலும் ரோகித் சர்மாவின் பார்ட்னராக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்திய இவர் ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அந்த நிலைமையில் இங்கிலாந்தில் நடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரை குணமடைந்த பின்பும் தேர்வுக்குழு பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் கழற்றிவிட துவங்கியது.

dhawan 3

ஏனெனில் அவரது இடத்தில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ராகுல் அவரது இடத்தை தன்னுடையதாக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டார். போதாகுறைக்கு 35 வயதை கடந்த அவர் ஐபிஎல் தொடரில் சமீப காலங்களில் 400, 500 ரன்களை எடுத்தாலும் அதை அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்க தடுமாறுகிறார். அதன் காரணமாக டி20 அணியில் வாய்ப்பை இழந்த இவருக்கு முதன்மையான ஒருநாள் தொடர்களில் வாய்ப்பளிக்காத தேர்வுக்குழு 2021இல் இலங்கையில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை ஆசையாக காட்டி அடுத்த தொடரில் கழற்றிவிட்டு மோசம் செய்தது.

- Advertisement -

அதனால் இந்திய அணியில் தண்ணீரில் எண்ணெய் போல் ஒட்டியும் ஒட்டாமல் இருந்து வரும் ஷிகர் தவான் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் 2 அரை சதங்கள் அடித்திருந்த நிலையில் அதன்பின் 5 மாதங்கள் கழித்து சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சுமாராகவே செயல்பட்டார். இதன் காரணமாக அவரின் நட்சத்திரம் மற்றும் அனுபவ அந்தஸ்தை கருத்தில் கொண்டுள்ள தேர்வுக்குழு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் கேப்டன்ஷிப் பதவியை கொடுத்து அடுத்த தொடரில் கழற்றி விடப்போகிறது.

SUnil and Rohan Gavaskar Father SOn Cricketers

இந்நிலையில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்ட ஷிகர் தவான் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படத் தவறினார் என்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் கழற்றிவிட்டால் அது நியாயமானதாக இருக்காது என்று முன்னாள் இந்திய வீரர் ரோகன் கவஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலமாக சிறப்பாக செயல்பட்ட ஷிகர் தவானிடம் சிறப்பாக செயல்படுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற நிலைமையை ஏற்படுத்தக்கூடாது. இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளில் சுமாராக செயல்பட்ட அவருக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்படுங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் என்ற வகையில் அழுத்தத்தைக் கொடுப்பது நியாயமற்ற முடிவாகும்”.

Dhawan-1

“அவர் தன்னுடைய கடைசி 10 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 44 என்ற சராசரியில் ரன்களை குவித்துள்ளார். அதாவது 10 போட்டிகளில் ஒவ்வொரு 3 போட்டிகளுக்கும் ஒருமுறை அரைசதம் அடித்து வருகிறார். ஒருவேளை நாளையே அவர் தனது கேரியரை முடித்துக் கொண்டு கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தால் அவர் பெருமைப்படும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டுள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும் – விவரம் இதோ

ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் சமீப காலங்களில் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களை குவிக்காத நிலையில் கிட்டத்தட்ட அவர்களுக்கு ஈடான திறமையும் அனுபவமும் அந்தஸ்தும் பெற்றுள்ள ஷிகர் தவானுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் கடைசி வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்று ரோகன் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement