IND vs WI : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும் – விவரம் இதோ

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் துவங்க உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது டெஸ்ட் தொடரை சமன் செய்த வேளையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி தற்போது மாபெரும் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

indvswi

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை ஜூலை 22 ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்தெந்த நாட்களில் போட்டி எங்கெங்கு நடைபெறுகிறது? என்பது குறித்த முழு அட்டவணையை நாங்கள் இங்கு விவரமாக உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

INDvsWI

அதன்படி ஜூலை 22-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், ஜூலை 24-ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஜூலை 27-ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளன. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுமே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், ட்ரினிடாடில் நடைபெற உள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுமே இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணியே இந்த ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி தவிப்பதற்கு முன்பே சரியான முடிவை எடுத்துவிட்டார் – பென் ஸ்டோக்ஸ் பற்றி முன்னாள் கேப்டனின் கருத்து

1) ஷிகர் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) சுப்மன் கில், 4) சூரியகுமார் யாதவ், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6)தீபக் ஹூடா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) இஷான் கிஷன், 10) சஞ்சு சாம்சன், 11) ஷர்துல் தாகூர், 12) யுஸ்வேந்திர சாஹல், 13) ஆவேஷ் கான், 14) பிரசித் கிருஷ்ணா, 15) முகமது சிராஜ், 16) அர்ஷ்தீப் சிங்க்

Advertisement