இவரால் தான் தோட்றோம்..! தோல்வியை ஜீரணிக்க முடியலை..! தினேஷ் கார்த்திக் புலம்பல்..!

dinesh1
- Advertisement -

நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான கடைசி தகுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஹைதராபாத் அணி. இந்த போட்டியின் தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்று கொல்கதானியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
dinesh karthikk

நேற்று(மே 25 ) இரவு கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 வர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கு பின் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் “இதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இறுதியில் தோல்வியடைந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் சேசிங் செய்து கொண்டிருக்கும் போது நன்றாக தான் விளையாடினோம் ஆனால் ஒரு சில தவரான ஷூட்களாலும், ரன் அவுட்களாலும் ஆட்டம் மாறிவிட்டது.

இந்த போட்டியில் நான், நிதிஷ் அல்லது ராபின் பொறுப்பாக நின்று விளையாடி போட்டியை முடித்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறப்பாக விளையாடாதது என்னுடைய தவறுதான். எங்களிடம் பல்வேறு பலன்கள் இருந்தன மேலும் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டனர். இது அணிக்கு ஒரு நல்ல விடயம் தான் ” என்று கூறியுள்ளார்.

Advertisement